ஆர்.கே.நகர் தேர்தல் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாக நடிகை லதா பிரசாரம்


ஆர்.கே.நகர் தேர்தல் ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாக நடிகை லதா பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2017 5:38 AM GMT (Updated: 3 April 2017 5:38 AM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து நடிகை லதா பிரசாரம் செய்தார்

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து நடிகைகள் லதா, பாத்திமாபாபு, இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

நேற்று மாலை நடிகை லதா பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய வாக்குறுதியான “நடமாடும் எம்.எல்.ஏ. வேன்” மக்களை தேடிச் செல்லும் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என கூறினார்.

எழில் நகர் பகுதியில் உள்ள குப்பைமேடு அகற்றப் பட்டு, தொழில்பூங்கா அமைக்கப்படும், குடிநீர் வசதி, சாலை, இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி போன்றவற்றை நிறைவேற்று வோம் என லதா பிரசாரம் செய்தார்.அவரது பேச்சை கேட்க ஆர்வத்துடன் மக்கள் திரண்டனர்.

மேலும் நட்சத்திர பேச்சாளர்கள் நடிகர்கள் சுந்தர் ராஜன், தியாகு, ரஞ்சித், நடிகை பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோரும் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

தேர்தல் வாக்குறுதிகள் பற்றி வீதி வீதியாக சென்று எடுத்துரைத்தனர். ஜல்லிக்கட்டு நாயகர் ஓ.பன்னீர்செல்வம் என்பதை பிரசாரத்தின்போது அவர் கள் குறிப்பிட்டபோது  கைதட்டி வரவேற்பு அதி கரித்தது.

ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற முக்கிய காரண மாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு பெற்ற வேட்பாளர் மதுசூதனனுக்கு “இரட்டை மின் விளக்கு” சின்னத்தில் வாக்களிக் கும்படி கூறினர்.ஆர்.கே.நகரில் 100-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 7 சட்டமன்ற உறுப்பினர்களும் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தனர்.

Next Story