இரட்டை வேடம் போடும் தி.மு.க பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்


இரட்டை வேடம் போடும் தி.மு.க பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
x
தினத்தந்தி 3 April 2017 10:59 AM GMT (Updated: 3 April 2017 11:28 AM GMT)

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை

தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் முதலில் இந்தி மொழியில் தான் ஊர்ப்பெயர் எழுதப்பட்டிருக்கும். அடுத்து ஆங்கிலம், அதனையடுத்தே தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு தான் இவ்வாறு எழுதப்படுகிறது என்று திமுக குற்றம்சாட்டியது.

இதுகுறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ''மைல்கற்களில் இந்தி எழுதப்பட்டிருப்பதில் இரட்டை வேடம் போடுகிறது திமுக. காரணம், 2006ஆம் ஆண்டு, திமுக மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் டி.ஆர் பாலு. அவர்தான் இந்தியில் எழுத உத்தரவு போட்டார். ஆனால், இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது.

இந்தியில் எழுத உத்தரவு போட்ட டி.ஆர் பாலுவை கட்சியை விட்டு நீக்குவார்களா? என கேள்வி எழுப்பினார். பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ள இந்தக் கருத்துக்கு இதுவரை திமுகவினரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதே வேளையில் ஹைட்ரோ கார்பன், கச்சத்தீவு உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்சனைக்கும், பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுக மீது சமீபகாலமாகக் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story