ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு, ‘பூத் சிலிப்’ வினியோகம்


ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு, ‘பூத் சிலிப்’ வினியோகம்
x
தினத்தந்தி 3 April 2017 9:11 PM GMT (Updated: 3 April 2017 9:11 PM GMT)

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2.5 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை,

தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் அச்சிடும் பணி முடிவடைந்தது. கள்ள ஓட்டை தடுக்கும் விதமாக வாக்காளர் புகைப்படம் தெளிவாக தெரியும் வகையில் பெரிய அளவில் முதன்முறையாக இந்த இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நேற்று நேரடியாக தொடங்கிவைத்தார்.

தண்டையார்ப்பேட்டை திருவள்ளுவர் நகரில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பூத் சிலிப்பை அவர் வழங்கினார். இந்த பணி வருகிற சனிக்கிழமைக்குள் முடிவடையும் என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.


Next Story