சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதியின் வைரவிழா தொடங்கியது


சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதியின் வைரவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 3 Jun 2017 6:20 PM IST (Updated: 3 Jun 2017 6:19 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதியின் வைரவிழா இன்று தொடங்கியது.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வின் பொது செயலாளர் க. அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மந்திரி துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதியின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூட்டணி கட்சி தலைவர்களும் வந்துள்ளனர்.  டெரிக் ஓ பிரையன், திருநாவுக்கரசர், காதர் மொய்தீன், டி. ராஜா, உமர் அப்துல்லா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு மு.க. ஸ்டாலின் நினைவு பரிசு வழங்குகிறார்.

Next Story