அரசு அறிவித்தபடி சென்னையில், அனைத்து மாநகராட்சி பள்ளிகளும் இன்று தொடங்கும்


அரசு அறிவித்தபடி சென்னையில், அனைத்து மாநகராட்சி பள்ளிகளும் இன்று தொடங்கும்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:15 AM IST (Updated: 6 Jun 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் அரசு அறிவிப்பின்படி இன்று (புதன்கிழமை) திறக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 281 பள்ளிகள் செயல்படுகின்றன. அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், நீர்த்தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பள்ளி தொடங்கும் நாளில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, பள்ளிகளில் வாழைக்கன்று, பலூன் மற்றும் மாவிலை தோரணம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ–மாணவிகளுக்கு இனிப்புகள், எழுது பொருட்கள் மற்றும் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சென்னை பள்ளிகளில் சேர்த்து பயனடைய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story