ஆழ்வார்பேட்டையில் போட்டோ ஸ்டூடியோவில் திடீர் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
ஆழ்வார்பேட்டையில் உள்ள போட்டோ ஸ்டூடியோவில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
சென்னை,
இந்த நிலையில் நேற்று மாலை போட்டோ ஸ்டூடியோவில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சைதாப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய பகுதியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொருட்கள் நாசம்இருப்பினும் அதிக அளவில் பொருட்கள் இருந்ததால் தீ கட்டுக்குள் வராமல் எரிந்துகொண்டு இருந்தது. இதனையடுத்து கிண்டி, ராஜ்பவன், தேனாம்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதியில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 மெட்ரோ தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரமாக 30–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் போட்டோ ஸ்டூடியோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.