பேச்சுவார்த்தை என அந்த அணியினர் நாடகமாடுகின்றனர் ஓ.பன்னீர்செல்வம் குற்றசாட்டு
பேச்சுவார்த்தை என எடப்பாடி அணியினர் நாடகமாடுகின்றனர் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக அணிகள் இணைப்பு குறித்த குழுக்கள் கலைக்கப்பட்ட பின்னர் பேச்சு வார்த்தை எப்படி நடைபெறும் ? பேச்சு வார்த்தைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து நாடகம் ஆடுகின்ற சூழலை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றனர். நாங்களும் நாடகம் ஆட தயார் இல்லை. ஆக்கப்பூர்வமான எந்தவொரு யோசனையும், கருத்து பரிமாற்றம் செய்யவில்லை. இதனை கவனித்து தான் பேச்சுவார்த்தைக்கென அமைக்கப்பட்ட குழுவை கலைத்தோம்.
அதிமுகவில் உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்பதை கூடிய விரைவில் நிரூபிப்போம். கட்சி சட்ட விதிப்படி பொதுசெயலர் பதவி காலியாக உள்ளது. பொருளாளரும், அவைத்தலைவரும் தான் கட்சியை நடத்த வேண்டும் என்ற நிலையில் தேர்தல் கமிஷன் நல்ல முடிவை தரும்.
போயஸ்கார்டன் எங்களின் கோயில். அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்பது சட்ட முடிவின்படி நடவடிக்கை எடுப்போம். 14 ம் தேதி காலை சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story