காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு


காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 1:30 AM IST (Updated: 13 Jun 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடந்தது.

சென்னை,

சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் குர்ஷித் அகமது சையத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹலான் பாகவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய குர்ஷித் அகமது சையத், ‘இந்திய மக்களின் பண்பாட்டை மத்திய அரசு சிதைக்க பார்க்கிறது. தேவையற்ற சட்டங்களை கொண்டு வருகிறார்கள். இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.


Next Story