அதிமுக எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் சட்டசபையில் கூச்சல் குழப்பம்
அதிமுக எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது
சென்னை
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 'எம்.எல்.ஏ சரவணனின் வீடியோ காட்சிகள்' குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என் கோரினார்.எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விவாதிக்க முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.அவையை வழிநடத்த திமுகவினர் ஒத்துழைக்க வேண்டும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

Related Tags :
Next Story