நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க தேர்தல் கமிஷனிடம் தீபா முறையீடு


நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க  தேர்தல் கமிஷனிடம் தீபா முறையீடு
x
தினத்தந்தி 14 Jun 2017 1:14 PM IST (Updated: 14 Jun 2017 1:14 PM IST)
t-max-icont-min-icon

நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க என தேர்தல் கமிஷனிடம் தீபா முறையீட்டு உள்ளார்.


சென்னை,

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் ஜெயக் குமாரின் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி னார்.

அ.தி.மு.க.வில் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி ஆகியவை  தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் தினகரனும் தனி அணியாக இயங்கி வருகிறார். ‘‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’’ அ.தி.முக. தீபா அணியாக செயல்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாவும் இரட்டைஇலை சின்னத்தை யும் அ.தி.மு.க.வையும் மீட் போம் என்று அறிவித்திருந் தார்.

எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் போட்டிப் போட்டுக் கொண்டு நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறிவருகிறார்கள். இது தொடர்பாக 2 அணியினருமே டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. தீபா அணி சார்பிலும் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று தேர்தல் ஆணையத்தில் முறைப்படி மனு தாக்கல்  செய்ய உள்ளனர்.

அ.தி.மு.க. கிளை பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் கையெழுத்திட்ட 50 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தீபா அணி தேர்தல் ஆணையத்தில் நாளை தாக்கல் செய்கிறது. இதனை நேரில் தாக்கல் செய்வதற்காக தீபா அணியின் தலைமை செய்தி தொடர்பாளர் வக்கீல் பசும்பொன்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. கபிலர்மலை சரஸ்வதி, கடலூர் வெங்கடாஜலபதி, காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று மாலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.

நாளை காலை 11 மணிக்கு தீபா அணியின் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றிருப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும், பொதுச் செயலாளர் தேர்தலை முறையாக நடத்த வேண்டும், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களை கொண்டு இயங்கி வரும் தீபா தலைமையிலான அ.தி.மு.க. அணியை உண்மையான அ.தி.மு.க.வாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல்  ஆணையத்திடம் தீபா அணியினர் அறிவுறுத்த உள்ளனர்.


Next Story