தினகரனுடன் எம்.பிக்கள் வசந்தி முருகேசன்- பி.ஆர். செந்தில்நாதன் சந்திப்பு


தினகரனுடன் எம்.பிக்கள் வசந்தி முருகேசன்- பி.ஆர். செந்தில்நாதன் சந்திப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 3:26 PM IST (Updated: 14 Jun 2017 3:25 PM IST)
t-max-icont-min-icon

தினகரனுடன் தென்காசி தொகுதி எம்.பி வசந்தி முருகேசன்- சிவகங்கை பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி ஆகியோர் சந்தித்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கால கட்டத்தில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும்,  ஆனால் அதற்கான எந்த முயற்சியும் நடைபெறாததால் மீண்டும் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அ.தி.மு.க.  நிர்வாகிகள் யாரும் அவரோடு தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

ஜெயக்குமாரின் பேச்சை நிர்வாகிகள் யாரும் பொருட்படுத்தாமல் டி.டி.வி. தினகரனை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்பட 33 எம்.எல்.ஏக்கள் டி.டி.வி. தினகரனை சந்தித்துள்ளனர்.

நேற்று  சிவகங்கை மாவட்டச்செயலாளரும், எம்.பி.யுமான பி.ஆர். செந்தில்நாதன் மாவட்ட நிர்வாகிகள்  100 பேருடன் சென்று டி.டி.வி. தினகரனை  சந்தித்து பேசினர்.  இதுபற்றி  நிருபர்களிடம் செந்தில்நாதன் கூறுகையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

இன்று தென்காசி தொகுதி எம்.பி வசந்தி முருகேசன் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது
தினகரனும், சசிகலாவும் சேர்ந்து கட்சியை வழி நடத்துவார்கள், விரைவில் கட்சி பிரச்சினைகள் சரியாகி அனைவரும் ஒன்று சேருவார்கள் என கூறினார்.


Next Story