இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டப்பேரவையில் கலகலப்பு


இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டப்பேரவையில் கலகலப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 12:02 PM IST (Updated: 16 Jun 2017 12:02 PM IST)
t-max-icont-min-icon

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் என சட்டப்பேரவையில் கலகலப்பான விவாதம் நடைபெற்றது.

சென்னை

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில், நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்களை எம்எல்ஏக்களுக்கு அளிக்கலாமே என்றதும் சட்டப்பேரவை கலகலப்புடன் காணப்பட்டது.

உடனே எழுந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வனத்துறை மானிய கோரிக்கையின்போது மீன்கள் வழங்கப்படும் என பதில் அளித்தார். மேலும், இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

Next Story