எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரம் மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை
எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. செயல் தலைவரான மு.க. ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, துரைமுருகன், அபுபக்கர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அங்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய அவர், சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
3 முறை சட்டமன்றத்தில், பேர விவகாரம் பற்றி விவாதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்து விட்டார்.

Related Tags :
Next Story