ஆட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்: ஆளுநரை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்று ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதகமாக செயல்பட எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது என்பதற்கான வீடியோ தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வெளியானது. இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்து பேசினார்.
அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, துரைமுருகன், அபுபக்கர் ஆகியோரும் சென்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரத்தில் முறையான விசாரணை தேவை என ஆளுநரை சந்தித்து மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆளுநருடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வீடியோ விவகாரம் பற்றி பேச சட்டமன்றத்தில் அனுமதி கிடைக்கவில்லை.
சட்டப்படியும், விதிமுறைகளின்படியும் மீண்டும் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். அதன்பின் ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தி.மு.க. அளித்துள்ள கோரிக்கைகளை சட்டரீதியாக கலந்து ஆலோசனை செய்து விட்டு முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசித்து முடிவு செய்வோம் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story