பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்
x
தினத்தந்தி 5 July 2017 11:17 PM IST (Updated: 5 July 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அரக்கோணம்–காட்பாடி இடையே வாலாஜா ரோடு ரெயில் நிலைய பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகிற 6, 8, 9, 10, 11–ந் தேதிகளில் கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

* ஈரோடு–சென்னை வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (வ.எண்.22650), பழனி–சென்னை எக்ஸ்பிரஸ் (22652), கே.எஸ்.ஆர். பெங்களூரு–சென்னை வரும் மெயில் (12658), மேட்டுப்பாளையம்–சென்னை வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12672), மங்களூரு–சென்னை வரும் எக்ஸ்பிரஸ் (12602), ஆலப்புழா–சென்னை வரும் எக்ஸ்பிரஸ் (22640) ரெயில்கள் 6 (இன்று), 10, 11 ஆகிய தேதிகளில் 20 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.

* மைசூரு–சென்னைக்கு வரும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22681) ரெயில் இன்று (வியாழக்கிழமை) 20 நிமிடம் காலதாமதமாக வந்து சேரும்.

* தான்பாத்–ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8 மற்றும் 9–ந் தேதிகளில் ஒரு மணி நேரம் 45 நிமிடமும், 10–ந் தேதி 15 நிமிடமும், 11–ந் தேதி 20 நிமிடமும் காலதாமதமாக ஜோலார்ப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

* டேராடூன்–மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12688) வருகிற 9–ந் தேதி ஒரு மணி நேரம் 15 நிமிடம் காலதாமதமாக ஜோலார்ப்பேட்டை வந்தடையும்.


Next Story