பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பல கோடி ரூபாய் சேதம்


பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பல கோடி ரூபாய் சேதம்
x
தினத்தந்தி 6 July 2017 9:55 PM GMT (Updated: 2017-07-07T03:25:38+05:30)

செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

செங்குன்றம்,

விபத்தின்போது அங்கு பணியாற்றிய 60 தொழிலாளர்கள் மாற்றுப்பாதை வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாயின.

இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் அங்கு ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பார்கள் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

தீவிபத்து நடந்த இடத்துக்கு புழல் உதவி கமிஷனர் லிங்க திருமாறன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த தீவிபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story