தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல்ஹாசன் கூறியது உண்மை
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என்று, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தஞ்சாவூர்,
கேள்வி:- கதிராமங்கலத்தில் மக்கள் 63 நாட்களாக போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டுகொள்வதில்லையே?
பதில்:- அரசு எப்படி கண்டு கொள்ளும். இப்போது தான் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இனி அரசு கண்டு கொள்ளும்.
கேள்வி:- ஓ.என்.ஜி.சி.யால் பாதிப்பு இல்லை என்கிறார்களே?
பதில்:- அவர்கள் அப்படி தான் கூறுவார்கள்.
கேள்வி:- மக்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்.
பதில்:- மக்களை காப்பாற்ற ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் சக்தியை மீறி நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் இங்கு(கதிராமங்கலத்துக்கு) வர வேண்டும். அவர்கள் வந்து கூறினால் தான் மக்கள் நம்புவார்கள்.
கேள்வி:- தே.மு.தி.க. எந்த வகையில் போராடும்.
பதில்:- எல்லா வகையிலும் மக்களோடு நின்று போராடுவோம்.
கேள்வி:- தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளாரே?
பதில்:- உண்மை தான். உண்மையை தான் அவர் சொல்லி இருக்கிறார்.
கேள்வி:- திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி அதிகமாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளாரே?
பதில்:-கேளிக்கை வரி அதிகமாகத்தான் உள்ளது. கேளிக்கை வரி இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.