சென்னையில் போலீசார் சோதனை: போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,151 பேர் மீது வழக்கு


சென்னையில் போலீசார் சோதனை: போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,151 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 July 2017 12:28 AM IST (Updated: 24 July 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கடந்த 21, 22–ந் தேதிகளில் போலீசார் இரவு 9 மணி முதல் அதிகாலை வரை வாகன சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

போக்குவரத்து, சட்டம்–ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,151 பேர் மீது வழக்கு போடப்பட்டது.

போதையில் வாகனம் ஓட்டியதாக 256 பேர் பிடிப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிவேகமாக வாகனங்களில் சென்ற 19 பேரும் வழக்கில் சிக்கினார்கள்.


Next Story