மெரினா போலீஸ் நிலையம் இடிக்கப்படுகிறது; ரூ.1.28 கோடி செலவில் புதிய கட்டிடம்
சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே உள்ள கட்டிடத்தில் கடந்த 41 ஆண்டுகளாக மெரினா போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
சென்னை,
மெரினா போலீஸ் நிலையம் செயல்படும் கட்டிடம் பழுதடைந்துவிட்டதால் அதை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட அரசு உத்தரவிட்டது. இதற்காக ரூ.1.28 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விரைவில் மெரினா போலீஸ் நிலையம் இயங்கி வரும் கட்டிடம் இடிக்கப்படவுள்ளது. புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகளும் உடனே தொடங்கப்படவுள்ளன. இதனால் தற்காலிகமாக மெரினா போலீஸ் நிலையம் டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடய அறிவியல் அலுவலக வளாகத்துக்குள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. மெரினா போலீஸ் நிலையத்தின் புதிய கட்டிடம் 6 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அந்த போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story