தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2017 12:09 PM IST (Updated: 14 Aug 2017 12:09 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை,

முதல்-அமைச்சர் எடப் பாடி  பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீர் மாநிலம்,  தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில்  தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மகா ரெஜிமெண்ட் ராணுவ வீரர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்டனி கிராமத்தைச் சேர்ந்த  பெரியசாமியின் மகன்  இளையராஜா 12.8.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகுந்த துயரமும்,   மன வேதனையும்  அடைந்தேன்.  இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு  ரூ.20 லட்சம் உடனடியாக  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

Next Story