ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டிடிவி தினகரன்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி தினகரன் பேசிஉள்ளார்.
மதுரை,
மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை மீட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிமுகவை கொல்லைப்புறமாக அடையலாம் என நினைத்தால் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதை மறந்துவிட்டு, ஆட்சி நடத்த வேண்டும். எம்எல்ஏக்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது. அரசு ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர். விழாவில் எழுச்சி இருந்ததா?. மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை அமைச்சர்கள் சிந்திக்க வேண்டும், மக்கள் நலனை மனதில் கொண்டு திட்டம் தீட்டுங்கள்.
எங்களுக்கு விரோதியா அல்லது எம்.ஜி.ஆருக்கு விரோதியா என்பதை அமைச்சர்கள் சிந்திக்க வேண்டும்.
நீதி விசாரணை
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதா மறைவின் போது பதவியில் இருந்தவர்கள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறுகின்றனர். எங்களுடைய மடியில் கனம் கிடையாது. விசாரணையில் தான் உண்மை வெளிவரும். தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள், தர்மயுத்தம் நடத்துகிறோம் எனக்கூறுகிறார்கள் என்றார்.
Related Tags :
Next Story