போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையை சேர்ந்த 854 பேருக்கு விருதுகள் வழங்கும் விழா


போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையை சேர்ந்த 854 பேருக்கு விருதுகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 14 Aug 2017 11:15 PM GMT (Updated: 14 Aug 2017 7:58 PM GMT)

போலீஸ்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்க்காவல்படையை சேர்ந்த 854 பேருக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.

வீரதீர செயல், தகைசால்பணி, மெச்சத்தக்கப்பணி, சீர்திருத்த பணி, சிறப்பு பணி, சிறந்த புலனாய்வு, விரல்ரேகை அறிவியல் சீர்மிகுபணி, தொழில்நுட்ப சிறப்புப்பணி மற்றும் பொதுசேவைக்கான சீர்மிகுபணி ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.

விழாவில் மொத்தம் 854 பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இப்பதக்கங்களில் மத்திய அரசு வழங்கும் இந்திய குடியரசு தலைவரின் 265 பதக்கங்களும், தமிழக அரசு வழங்கும், முதல்–அமைச்சரின் 589 பதக்கங்களும் அடங்கும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ‌ஷகில் அக்தர், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவுக்கான பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் நடந்தது.


Next Story