சுதந்திர தின பாதுகாப்பு: சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு


சுதந்திர தின பாதுகாப்பு:  சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு
x
தினத்தந்தி 16 Aug 2017 3:06 AM IST (Updated: 16 Aug 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நேற்று 71–வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சென்னை,

சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து 2 முக்கிய ரெயில் நிலையங்களிலும் 50–க்கும் மேற்பட்ட போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்? அனைவரும் பணியில் உள்ளனரா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் திடீரென எந்த விதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்பு பாதுகாப்பு பணியில் போலீசார் எவ்வாறு ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.


Next Story