இரு அணிகள் இணைய ஓபிஎஸ் ஆதரவு அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி எதிர்ப்பு?


இரு அணிகள் இணைய ஓபிஎஸ் ஆதரவு அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி எதிர்ப்பு?
x
தினத்தந்தி 18 Aug 2017 3:27 PM GMT (Updated: 18 Aug 2017 3:26 PM GMT)

அதிமுக இரு அணிகள் இணைய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணியினர் தரப்பில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக இரு அணிகள் இணைய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்தில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி மூத்த நிர்வாகியுடன் ஆலோசனையை நடத்தி வருகிறார். 

மக்கள் ஆதரவு உள்ளநிலையில் இணைப்பு ஏன்? என கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின்  கே.பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்-அமைச்சர் அணி ஒதுக்கும் இலாகாக்கள் போதுமானதாக இல்லை என பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 


Next Story