நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தாம்பரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தாம்பரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
மருத்துவப் படிப்புக்கு மாணவ மாணவிகளை தேர்வு செய்ய ‘நீட்’ எனும் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வுக்கு மத்திய பாடத் திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவ மாணவிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு வேண் டாம் என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.
இந்த நிலையில் தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராகதமிழகம் முழுவது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூ னிஸ்டு,விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி , திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை விவசாயிகள் தொழிலாளர் கட்சி, த.மு.மு.க. ஆகியவை சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story