ஐநாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவோம்- பாகிஸ்தான் உங்கள் குரலை யாரும் கேட்கபோவது இல்லை-இந்தியா


ஐநாவில் காஷ்மீர் பிரச்சினையை  எழுப்புவோம்- பாகிஸ்தான் உங்கள் குரலை யாரும் கேட்கபோவது இல்லை-இந்தியா
x
தினத்தந்தி 15 Sep 2017 12:11 PM GMT (Updated: 15 Sep 2017 12:11 PM GMT)

ஐ.நா கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்புவோம் என பாகிஸ்தான் கூறியது எழுப்புங்கள் ஆனால் உங்கள் குரலை யாரும் கேட்கபோவது இல்லை என இந்தியா கூறி உள்ளது.

நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் ஐ நா கூட்டம் நடைபெறுகிறது.  நியூயோர்க்கில் உலகத் தலைவர்கள் சந்திக்கும் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடுமையான காஷ்மீர் பிரச்சினை மீண்டும் ஐ.நா.வில் இடம்பெறும்.

ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் மாலேஹே லோதி இது குறித்து ஐ.நா. தலைமையகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செப்டம்பர்  21 ந்தேதி ஐ.நா. பொது விவாதத்தின் போது பிரதம மந்திரி ஷாஹித் காக்கன் அபாசி  இந்த  சர்ச்சை எழுப்புவார். குறிப்பாக இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான்  இடையே பேச்சுவார்த்தை  நின்று போனது. பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் எழுப்ப வேண்டும் என்பது இன்னும் முக்கியமானது, என  நான் நினைக்கிறேன் என கூறினார்.

ஐக்கிய நாடுகளின் இந்திய தூதர் சையத் அக்பருதீன் கூறியதாவது:-

பாகிஸ்தான் அதன் பிரச்சினையை எழுப்பலாம் . எந்தவொரு நபரும் தங்கள் விருப்பபட்ட  எந்தவொரு விவாதத்தையும் உயர்த்துவதில் எந்த தடையும் இல்லை. அவர்கள் கடந்த ஆண்டு அதை முயற்சித்தார்கள்,மேலும் எண்ணிலடங்கா முறை அவர்கள் அந்த பிரச்சினையை  எழுப்பி உள்ளார்கள். எனினும் அவர்கள் ஒரு நாட்டின் ஆதரவையும்  பெறவில்லை. "

பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்தியாவின் பதான்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்தியா பேச்சு நடத்த வராது. நாங்கள் மீண்டும் மீண்டும் சொன்னோம் எந்த பேச்சு வார்த்தைக்கும்  ஒரு உகந்த சூழலைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சூழலை  உருவாக்கவும், நாம் பேச தயாராக இருக்கிறோம் என கூறினார்.

Next Story