எதிர்க்கட்சிகளை திட்டுவதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகின்றனர் -மு.க. ஸ்டாலின்


எதிர்க்கட்சிகளை திட்டுவதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகின்றனர் -மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Oct 2017 1:37 PM IST (Updated: 4 Oct 2017 1:37 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளை திட்டுவதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்துகின்றனர் என மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.

சென்னை, 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கட்டாயப்படுத்தி 100 நாள் பணியாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். மாணவர்களை விழாவுக்கு கூட்டி செல்வது தொடர்ந்து வருகிறது. கரூரில் கட்டாயப்படுத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர் என குற்றம் சாட்டிஉள்ளார். எதிர்க்கட்சிகளின் மீது பொய் வழக்கு போட காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது என்றார் முக ஸ்டாலின். டெங்கு காய்ச்சல் பரவ ஏதுவாக அரசு பணம் வாங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் முக ஸ்டாலின் சாடிஉள்ளார். 


Next Story