சென்னையில், நூற்றாண்டு நிறைவு விழா: எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் வைத்திருந்தால் சமர்ப்பிக்கலாம்


சென்னையில், நூற்றாண்டு நிறைவு விழா:  எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் வைத்திருந்தால் சமர்ப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 Oct 2017 4:45 AM IST (Updated: 10 Oct 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில், கடந்த ஜூன் 30–ந்தேதி மதுரையில் தொடங்கி, தொடர்ந்து மாவட்ட அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவுவிழா, சென்னையில் மிகவும் பிரமாண்டமான விழாவாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்விழாவில் நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. நூற்றாண்டு விழா மலர், புகைப்படத் தொகுப்பு, குறும்படம், எம்.ஜி.ஆரின் பொதுவாழ்வு, கலைத்துறை மற்றும் அரசியல் துறை ஆகியவற்றின் அரிய புகைப்படங்கள், கட்டுரைகள், சம்பவங்கள், கவிதைகள் உள்ளடக்கி வெளியிடப்பட உள்ளது.

எனவே எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் வைத்திருப்போர் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ்இயங்கும் புகைப்படப்பிரிவில் நேரடியாகவோ அல்லது இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, புகைப்படப் பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை–9 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ (idfieldpublicity@gmail.com) அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444127340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story