மாநில செய்திகள்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் 91–வது பிறந்தநாள் விழா + "||" + Hindu Govt Organizer Rama Gopalan 91th Birthday Celebration

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் 91–வது பிறந்தநாள் விழா

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் 91–வது பிறந்தநாள் விழா
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் நேற்று தனது 91–வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சென்னை,

அவருக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலனின் 91–வது பிறந்தநாள் விழா, சொர்ணாபிஷேக விழாவாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, மாநில அமைப்பாளர் பக்தன், சென்னை மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், செயலாளர் மணலி மனோகரன் உள்பட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ராம கோபாலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் வி.எஸ்.ஜே.சீனிவாசன், வக்கீல் அணி மாநில தலைவர் சி.தங்கமணி, மாநில செயலாளர்கள் கரு.நாகராஜன், சி.ராஜா உள்பட பா.ஜ.க. நிர்வாகிகளும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டி.தேவநாதன் யாதவ், துணைத்தலைவர் குணசீலன், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் உள்பட பலரும் ராம கோபாலனை வாழ்த்தினர்.

ஆர்.எஸ்.எஸ். செயலாளர் இல.நடராஜன், பாரதிய கிஷான் சங்க மாநில அமைப்பாளர் கோபி, இந்து மி‌ஷன் ஆஸ்பத்திரி செயலாளர் டி.கே.எஸ்.சீனிவாசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக சேர்மன் வி.ஐ.டி.செல்வம், சைபர் கிரைம் சேப்டி நிறுவனர் டாக்டர் அமர்பிரசாத் ரெட்டி, விசுவ இந்து பரி‌ஷத் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் உள்ளிட்ட இந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் ராம கோபாலனை வாழ்த்தினர்.

விழாவில் அனைவருடைய வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டு ராம கோபாலன் பேசியதாவது:–

தனி மனித புகழ்ச்சி சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் நல்லது அல்ல. அது தனி மனிதனுக்கும் கேடு, சமுதாயத்துக்கும் கேடு ஆகும். ஒரு நல்ல மனிதன் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்.

இந்து மதத்தின் கோட்பாடு தர்மத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே ஆகும். எனவே அதற்கு ஏற்றார்போல் உழைக்க வேண்டும். ஒரு நபரை மையப்படுத்தி மட்டும் செயலாற்ற கூடாது.  இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘ராம கோபாலனின் கோட்பாடுகள் தான் என்னை முழு மனிதனாக ஆக்கியது. அவருடன் ஒரு வருடம் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றிருக்கிறேன். அப்போது நான் கற்ற அனுபவங்கள் பல. ஒரு நல்ல ஆன்மிக தலைவர் எனும் பெயருக்கு ராம கோபாலன் முழுமையான சொந்தக்காரர்’’, என்றார்.

முன்னதாக மங்கள இசை வாத்தியம், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. வீரமணி ராஜூ இசைக்குழுவினரின் பக்தி இசை மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசியின் சொற்பொழிவும் நடந்தது.