பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்


பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்
x
தினத்தந்தி 21 Oct 2017 3:15 AM IST (Updated: 21 Oct 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

சென்னை,

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பை மேலும் 30 நாட்களுக்கு கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் 26 ஆண்டுகளாக பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அற்புதம்மாள், பேரறி வாளனின் தந்தை ஞான சேகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு(பரோல்) வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்து ஆகஸ்டு 24-ந்தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பல்வேறு நிபந்த னைகளுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கினார்.

கடந்த செப்டம்பர் 24-ந் தேதியோடு பேரறிவாளனுக்கு அளிக் கப்பட்ட பரோல் முடி வடைந்தது. அதைத்தொடர்ந்து தாயார் அற்புதம் மாள், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்கும்படி கடிதம் எழுதினார்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கினார். அதன்படி பேரறி வாளனுக்கு அக்டோபர் 24-ந்தேதி வரை பரோல் காலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

தற்போது நீட்டிக்கப் பட்ட பரோல் காலம் முடி வடைய இருப்பதால் மீண் டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பேரறிவாளன் எங்களுடன் தங்கியிருப்பதால் நான் மற்றும் எனது குடும் பத்தினரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சாதாரண விடு முறையை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story