நடிகர் விஜயை வளைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்


நடிகர் விஜயை வளைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 22 Oct 2017 10:20 AM IST (Updated: 22 Oct 2017 10:20 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜயை வளைத்து போட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜயை வளைத்து போட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

விஜய் நடித்து தீபாவளி அன்று திரைக்கு வந்த ‘மெர்சல்’ படத்தில், அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

மருத்துவர்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசை குறை கூறியிருப்பதாக கூறி, நடிகர் விஜய்யை பா.ஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் கூறி வருகிறார்கள். அந்த காட்சிகளை நீக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் விஜயை வளைத்து போட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், கரூரில் நடைபெறும் பொது குழுவில் அரசியல் சூழல், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்கப்படும்.  எச். ராஜா பற்றி நடிகர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்த தகவலை நான் பார்க்கவில்லை.

தவறான கருத்துகள் எந்த படத்தில் வந்தாலும் அவற்றை நீக்குவதற்கு நாங்கள் கோரிக்கை வைப்போம்.  காங்கிரஸ் ஆட்சியில் அவசர நிலை பற்றிய திரைப்படம் வந்தபொழுது முடக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. பற்றி காங்கிரஸ் கட்சி தவறான தகவல்கள்  தருவதை நிறுத்த வேண்டும்.  நல்ல திட்டங்களை அரசு கொண்டு வரும்பொழுது எழும் விமர்சனங்களை கண்டு நாங்கள் அஞ்ச போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

Next Story