திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு


திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2017 6:28 AM GMT (Updated: 23 Oct 2017 6:28 AM GMT)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளனர்.

சென்னை

திருநெல்வேலி மாவட்டம்  காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கி முத்து , சுப்பு லட்சுமி தம்பதிகள் இவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர்.    வாங்கிய பணத்திற்க்கு அதிகமாக வட்டி கட்டி விட்டனர் இருந்து  தொடர்ந்து அவர் அந்த கந்து வட்டி கும்பல்  குடும்பத்திற்கு தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் போலீசார் இசக்கி முத்து குடும்பத்தை மிரட்டி உள்ளனர்.

இந்த நிலையில்  இன்று காலை இசக்கி முத்து, சுப்புலட்சுமி தம்பதிகள் தங்கள் 2 குழந்தைகளுடன்  நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டனர்.  இதைபார்த்த  அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து அவர்கள் 4 பேரையும் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Next Story