நாட்டில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: உலக சுகாதார அமைப்பின் இணை இயக்குநர் சவுமியா


நாட்டில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை:  உலக சுகாதார அமைப்பின் இணை இயக்குநர் சவுமியா
x
தினத்தந்தி 23 Oct 2017 4:24 PM GMT (Updated: 23 Oct 2017 4:24 PM GMT)

நாட்டில் பல்வேறு கிராமங்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்றன என உலக சுகாதார அமைப்பின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட சவுமியா கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநராக உள்ளவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா.  இவர் உலக சுகாதார அமைப்பின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னையில்  பாராட்டு விழா நடந்தது.

இதில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேசும்பொழுது, நமது நாட்டில் பல்வேறு கிராமங்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்றன.  உலகளவில் இந்தியாவில் 3ல் ஒரு பங்கினர் காசநோய் பாதிப்பு அடைந்தவர்களாக உள்ளனர்.

உடற்பயிற்சி, உடற்கட்டுப்பாடு இல்லாததே உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம்.  பொது சுகாதாரத்தினை பொறுத்தவரை மக்களின் தேவை என்னவென்று அறிவதே முக்கியம்.

தமிழர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்பவர்களாக இருக்கின்றனர் என்று பேசியுள்ளார்.

Next Story