கார் மோதி குழந்தை சாவு: ரூ.11¼ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


கார் மோதி குழந்தை சாவு: ரூ.11¼ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Oct 2017 3:45 AM IST (Updated: 24 Oct 2017 9:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பாக்கியம்.

சென்னை,

கடந்த 2010–ம் ஆண்டு வீட்டின் அருகே இவர்களது 1½ வயது குழந்தை ரிஷி விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார், குழந்தை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது.

இதைத்தொடர்ந்து சந்திரன்–பாக்கியம் தம்பதி இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, மனுதாரர்களுக்கு ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.


Next Story