சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 6 Nov 2017 6:35 AM IST (Updated: 6 Nov 2017 6:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் திருவள்ளூரில் தொடர்மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் வெள்ள நீர் புகுந்து பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.  பொதுமக்கள் பணிக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் மழை சற்று குறைந்தது.  இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பிய சூழல் ஏற்பட்டது.  இந்நிலையில் இன்று சென்னையில் மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் திருவள்ளூரில் தொடர்மழை பெய்து வருவதனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  மழையால் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழலில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story