சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்


சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
x
தினத்தந்தி 7 Nov 2017 6:39 AM IST (Updated: 7 Nov 2017 6:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தின்பலமாவட்டங்களில்கடந்தஒருவாரமாகவடகிழக்குபருவமழைபெய்துவருகிறதுஇதனால் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்ட பகுதிகளில் தொடர்மழையால் பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு வெளியானது. இதனை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் இன்று தொடர் விடுமுறைக்கு பின் திறக்கப்படுகின்றன.

சென்னையில் 9 பள்ளிகள், காஞ்சீபுரத்தில் 10 பள்ளிகள், திருவள்ளூரில் 12 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story