நாகையில் கடல் சீற்றம்: 10வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


நாகையில் கடல் சீற்றம்:  10வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 7 Nov 2017 8:54 AM IST (Updated: 7 Nov 2017 8:54 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் கடல் சீற்றத்தினால் 10வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

இந்த நிலையில், நாகையில் கடல் சீற்றம் அடைந்து காணப்படுகிறது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் கடல் சீற்றத்தினால் மீனவர்கள் 10வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையிலேயே உள்ளன.


Next Story