டெல்லியில் துப்பாக்கி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்


டெல்லியில் துப்பாக்கி முனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 17 Nov 2017 5:35 AM GMT (Updated: 17 Nov 2017 5:35 AM GMT)

டெல்லியை சேர்ந்த இளம்பெண்னை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை இரவு டாக்சியில் பயணம் செய்து உள்ளார். அப்போது டாக்சி ஓட்டுனர் மற்றொரு நபரையும் வாகனத்தில் ஏற்றி உள்ளார். டாக்சி அந்த பெண் செல்லவேண்டிய இடத்திற்கு  செல்லாமல் வேறொரு வழியில் சென்றுள்ளது.

இதுகுறித்து அந்த பெண் கேட்ட போது துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளார். நொய்டாவை சென்றடைந்த பின் டாக்சி ஓட்டுனரும் வாகனத்தின் பயணம் செய்த மற்றொரு நபரும் அந்த பெண்ணை துப்பாக்கியை காட்டி  மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள், ரூ.12,000 ரொக்கம், செல்போன் முதலியவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து அந்தப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, கூட்டு பாலியல் வன்கொடுமை, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அந்த நபர்கள் வீடியோ எடுத்ததாகவும் காவல்துறையிடம் சென்றால் அதனை வெளியிட்டு விடுவோம் என அந்த நபர்கள் மிரட்டியதாகவும் இளம்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Next Story