போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன் சசிகலா சகோதரர் திவாகரன் சொல்கிறார்


போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன் சசிகலா சகோதரர் திவாகரன் சொல்கிறார்
x
தினத்தந்தி 18 Nov 2017 1:44 PM IST (Updated: 18 Nov 2017 1:44 PM IST)
t-max-icont-min-icon

போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன் என சசிகலா சகோதரர் திவாகரன் கூறி உள்ளார்.

மன்னார்குடி

மன்னார்குடியில் சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவமனையில் இருக்கும் போது சசிகலாவை வீடியோ எடுக்க சொன்னது ஜெயலலிதா தான்.   பின்னாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்பதாலேயே ஜெயலலிதா வீடியோ எடுக்க சொன்னார்.ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுத்த வீடியோ ஆதாரம் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்.

ஜெயலலிதா வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது பற்றி தமக்கு தெரியாது. தமது வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்படவில்லை.போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன்

வருமான வரி சோதனையில் யாரும் தலையிட முடியாது அவர்கள் தங்களது கடமையை செய்கின்றனர்.1996 இல் இருந்தே சசிகலா வருமான வரித்துறை  வளையத்தில்  தான் இருக்கிறார்.

பெரும்பான்மையை நிருபிக்க சொல்லும் போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story