போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை; மாநில அரசுக்கு சம்பந்தமில்லை: முதல் அமைச்சர் பழனிசாமி


போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை; மாநில அரசுக்கு சம்பந்தமில்லை:  முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 18 Nov 2017 2:22 PM GMT (Updated: 18 Nov 2017 2:22 PM GMT)

போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருமான வரி சோதனைக்கும், மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

வருமான வரி சோதனை யாரால் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.  இந்த சோதனை ஜெயலலிதா இருந்த இடத்தில் நடத்தப்படவில்லை.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரி சோதனை நடந்துள்ளது.  சிலபேர் செய்த தவறுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


Next Story