உணவகத்தில் இட்லி சாப்பிட்டு ஜி.எஸ்.டி. வரியை ஆய்வு செய்த தமிழிசை சவுந்தரராஜன்


உணவகத்தில் இட்லி சாப்பிட்டு ஜி.எஸ்.டி. வரியை ஆய்வு செய்த தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 20 Nov 2017 11:36 AM IST (Updated: 20 Nov 2017 11:36 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு பின் உணவகங்களில் சாப்பிடுவதற்கு பில் வசூல் செய்வதை தமிழிசை சவுந்தரராஜன் இட்லி சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ந்தேதி ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. இதனால் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலையும் உயர்ந்தன.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முடிவில் உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 மற்றும் 12 சதவீதம் என்பதிலிருந்து 5 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 15ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது.

இதனால் உணவு பொருட்களின் விலை குறையும் என கூறப்பட்டது. எனினும், சில உணவகங்களில் விலை குறைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு பின் உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையை ஆய்வு செய்யும் பணியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இறங்கினார்.

அவர் உணவகம் ஒன்றில் 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டு பில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஜி.எஸ்.டி. வரியை குறைத்த பின்னர் உணவகங்கள் உணவு விலையை குறைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.


Next Story