ஜெயலலிதா -கடவுள் ஆசியோடு எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து உள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா ஆசி, கடவுளின் ஆசியோடு இரட்டை இலை சின்ன வழக்கில் நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை எங்கள் வசம் வந்துள்ளது. விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என கூறினார்.
எட்ப்பாடி பழனிசாமி- ஓபன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
இரட்டை இலை எங்கள் வசம் விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது 90% நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை கிடைத்த தன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து. ஜெயலலிதா ஆசி, கடவுளின் ஆசியோடு இரட்டை இலை சின்ன வழக்கில் நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து உள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு வழங்கபட்டு உள்ளது.
இப்போது தான் சின்னம் குறித்த தீர்ப்பு வந்து உள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Related Tags :
Next Story