எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்துள்ளது மத்திய அரசு- தங்க தமிழ் செல்வன்


எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்தை  கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்துள்ளது மத்திய அரசு- தங்க தமிழ் செல்வன்
x
தினத்தந்தி 25 Nov 2017 2:22 PM IST (Updated: 25 Nov 2017 2:22 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்துள்ளது மத்திய அரசு என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறினார்.

சென்னை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் 27-ம் தேதி திருச்சியில் தினகரன் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி, வரும் 29-ம் தேதி எங்கள் அணி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, மத்திய அரசு கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்துள்ளது.

தொப்பி சின்னம் வழங்கக்கூடாது என தமிழிசை கூறுகிறார் என்றால், தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? மீண்டும் தொப்பி சின்னத்தை கேட்டு பெறுவோம் என கூறினார்.

Next Story