தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை


தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2017 1:20 PM IST (Updated: 5 Dec 2017 1:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 4 நாட்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

சென்னை,

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.  அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும் வாய்ப்பு உள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம், ஆந்திராவை நோக்கி நகர கூடும்.

எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 4 நாட்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதேபோன்று ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story