ரூ.6 ஆயிரம் அல்ல ரூ.60 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற தயாரில்லை: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பேட்டி


ரூ.6 ஆயிரம் அல்ல ரூ.60 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற தயாரில்லை:  தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2017 3:12 AM GMT (Updated: 21 Dec 2017 3:11 AM GMT)

ரூ.6 ஆயிரம் அல்ல ரூ.60 ஆயிரம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற தயாரில்லை என வாக்களித்த பின் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பேட்டியளித்து உள்ளார்.

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.  இந்த வாக்கு பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும்.  தேர்தலுக்காக 258 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அவர், இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என நம்புகிறோம்.  ரூ.6 ஆயிரம் அல்ல, ரூ.60 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே. நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை என கூறியுள்ளார்.


Next Story