காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர் உடல் இன்று கோவை வருகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 9–ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது.
சென்னை,
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 9–ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தின், கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கொசூர்பக்கம் நாச்சி களத்துப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி (வயது 33) உள்பட 5 பேர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 19–ந் தேதி மாலை மூர்த்தி இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு ராணுவ முகாமில் இருந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (பாதுகாப்பு துறை) தெரிவித்து உள்ளது. கோவையில் இருந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story