ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 23 Dec 2017 7:45 PM GMT (Updated: 23 Dec 2017 5:52 PM GMT)

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை, 

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சேலம் மாவட்டம், பி.என்.பட்டி கிராமம், சேலம் கேம்ப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் மணிகண்டன், மணி என்பவரின் மகன் மோகன், தனபால் என்பவரின் மகன் ராஜா மற்றும் தனபால் என்பவரின் மகன் தமிழரசன் ஆகிய 4 சிறுவர்களின் உடல்கள் 18.12.2017 அன்று சேலம் கேம்ப் என்ற இடத்தில் உள்ள 16 கண் மதகு வழியாக உபரி நீர் செல்லும் ஆற்றின் குட்டை நீரில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மணிகண்டன், மோகன், ராஜா மற்றும் தமிழரசன் ஆகிய 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Next Story