தமிழக மக்களின் எண்ணம் வெளிப்படும் வகையில் ஆர்.கே. நகர் மக்கள் செயல்பட்டுள்ளனர்; மதுரையில் தினகரன் பேட்டி


தமிழக மக்களின் எண்ணம் வெளிப்படும் வகையில் ஆர்.கே. நகர் மக்கள் செயல்பட்டுள்ளனர்; மதுரையில் தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2017 5:46 AM GMT (Updated: 24 Dec 2017 5:46 AM GMT)

தமிழக மக்களின் எண்ணம் வெளிப்படும் வகையில் ஆர்.கே. நகர் மக்கள் செயல்பட்டுள்ளனர் என மதுரையில் தினகரன் பேட்டியளித்துள்ளார்.

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் நடந்து முடிந்த முதல் மற்றும் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் அடிப்படையில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.  தொடர்ந்து 3வது சுற்று எண்ணிக்கை நடந்து வருகிறது.

இந்த  நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தமிழக மக்களின் எண்ணம் வெளிப்படும் வகையில் ஆர்.கே. நகர் மக்கள் செயல்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஆர்.கே. நகர் தொகுதியின் ஒன்றரை கோடி தொண்டர்கள், மக்களுக்கு எனது நன்றி.  மக்கள் ஆட்சி மாற்றத்தினை விரும்புகிறார்கள்.

கேரளாவில் கூட குக்கர் சின்னம் வெற்றி பெற வேண்டும் என மக்கள் வாழ்த்தினர்.  சின்னமோ, வேட்பாளரின் பெயரோ வெற்றியை தருவதில்லை.  வேட்பாளரை வைத்தே சின்னம் வெற்றி பெறும்.

ஜெயலலிதாவிற்கு அடுத்து யார் வர வேண்டும் என்பதனை ஆர்.கே. நகர் மக்கள் தேர்வு செய்துள்ளனர்.  ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என கூறியுள்ளார்.

Next Story