"திமுகவும் தினகரனும் கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்" - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிக்கை


திமுகவும் தினகரனும் கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2017 8:45 PM IST (Updated: 24 Dec 2017 8:45 PM IST)
t-max-icont-min-icon

"திமுகவும் தினகரனும் கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்" என ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்தது. 

இந்நிலையில்  ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

திமுகவும் தினகரனும் கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.  தமிழக மக்களின் நலன் காக்க, ஓர் உருவாய் செயல்படுவோம்.  அதிமுகவை பிளவுபடுத்தி யாரும் அசைத்து விட முடியாது.

நூதனமுறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா என்னும் தீய சொல் உருவாக்கம் தினகரனும், திமுகவும் ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தான் தோல்வியை சந்தித்துள்ளது. தினகரன் வெற்றி தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்பதை ஏற்க முடியாது. அதிமுக தொண்டர்களை பிளவுபடுத்துவோ, அதிமுகவை யாரும் அசைத்துவிடவோ முடியாது.

இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது.திமுக, தினகரன் கூட்டுச்சதியால் மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியை அதிமுகவுக்கு சரிவை ஏற்படுத்தாது. தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நாளில் ரூ 20 நோட்டை கொடுத்து மக்களை நம்பவைத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

வேட்பாளர் மதுசூதனனுக்காக அல்லும் பகலும் பாடுபட்ட நிர்வாகிகள், செயல் வீரர்களுக்கு நன்றி. இரட்டை இலை சின்னத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story