தமிழகத்தில் இலவச திட்டத்தில் முறைகேடா? ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்


தமிழகத்தில் இலவச திட்டத்தில் முறைகேடா? ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2018 7:00 PM GMT (Updated: 12 Jan 2018 8:09 PM GMT)

உண்மை நிலவரங்களையும் உடனடியாக ஆய்வு செய்து உண்மை நிலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்என்று எடப்பாடி பழனிசாமிக்கு, விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி திருச்சியில் நடந்த தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழக அரசு உண்மையான பயனாளிகளை தேர்ந்தெடுத்து விலையில்லா இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் என இலவசப் பொருட்கள் வழங்குவதில் அடித்தட்டு மக்களை கண்டறியாமல் இலவசப் பொருட்கள் வழங்குகின்றது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தணிக்கை செய்து பார்த்தால் உண்மை நிலை புரியும். ஆனால் தமிழகத்தில் தணிக்கை செய்யும் நிலை இல்லை எனவும், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கூறிய குற்றச்சாட்டையும், அதன் உண்மை நிலவரங்களையும் உடனடியாக ஆய்வு செய்து உண்மை நிலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story